மொரோக்கோ, போர்த்துக்கல் அணிகள் காலிறுதிக்கு தகுதி

உலகக் கிண்ண கால்பந்தாட்டம்: மொரோக்கோ, போர்த்துக்கல் அணிகள் காலிறுதிக்கு தகுதி

by Staff Writer 07-12-2022 | 8:00 AM

Colombo (News 1st) விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரில் மொரோக்கோ மற்றும் போர்த்துக்கல் அணிகள் காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. 

முன்னோடி காலிறுதிச் சுற்றில் நேற்றைய(06) இரண்டாவது ஆட்டத்தில் 06 - 01 என்ற கோல் கணக்கில் போர்த்துக்கல் அணி வெற்றியீட்டியது. 

இதனிடையே, முன்னாள் சம்பியனான ஸ்பெயின் அணிக்கு எதிரான நேற்றைய(06) முன்னோடி காலிறுதி ஆட்டத்தில் பெனால்டி அடிப்படையில் மொரோக்கோ அணி வெற்றி பெற்றுள்ளது.