வௌிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த COVID – 19 கட்டுப்பாடுகள் சில நீக்கம்

வௌிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த COVID – 19 கட்டுப்பாடுகள் சில நீக்கம்

வௌிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த COVID – 19 கட்டுப்பாடுகள் சில நீக்கம்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

07 Dec, 2022 | 8:33 am

Colombo (News 1st) வௌிநாடுகளில் இருந்து நாட்டிற்கு வருபவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த COVID – 19 கட்டுப்பாடுகள் சில தளர்த்தப்பட்டுள்ளன.

அதற்கமைய, COVID – 19 தொற்று பரவுவதை தடுப்பதற்காக கடந்த ஏப்ரல் மாதம் அமுல்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

அதனடிப்படையில், வௌிநாடுகளில் இருந்து வருபவர்கள் COVID – 19 தடுப்பூசியை ஏற்றிக்கொண்டமைக்கான அட்டையை இனிவரும் நாட்களில் சமர்ப்பிக்க தேவையில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் கையொப்பத்துடன் வௌியிடப்பட்டுள்ள அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதனைத்தவிர, நாட்டிற்குள் பிரவேசிப்பதற்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட வேண்டிய COVID – 19 தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்துவதற்கான பரிசோதனை அறிக்கையையும் இனிவரும் நாட்களில் சமர்ப்பிக்க தேவையில்லை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாட்டை வந்தடைந்த நபரொருவர் நாட்டிற்குள் பிரவேசித்ததன் பின்னர் COVID – 19 தொற்று உறுதி செய்யப்படும் பட்சத்தில், குறித்த நபர் தமது தனிப்பட்ட செலவில் 07 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்