கல்வெவ சிறிதம்ம தேரர் மீண்டும் வைத்தியசாலையில் அனுமதி

கல்வெவ சிறிதம்ம தேரர் மீண்டும் வைத்தியசாலையில் அனுமதி

கல்வெவ சிறிதம்ம தேரர் மீண்டும் வைத்தியசாலையில் அனுமதி

எழுத்தாளர் Staff Writer

07 Dec, 2022 | 5:07 pm

Colombo (News 1st) அனைத்து பல்கலைக்கழக பிக்கு மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் கல்வெவ சிறிதம்ம தேரர் காய்ச்சல் காரணமாக மீண்டும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தேரரின் உடல்நிலை தேறி வருவதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

கல்வெவ சிறிதம்ம தேரருக்கு எதிராக சுமத்தப்பட்ட வழக்கில் அவருக்கு பிணை வழங்கி கடுவளை நீதவான் நேற்று (06) உத்தரவிட்டார்.

கடந்த மே மாதம் இசுருபாய கல்வி அமைச்சிற்கு முன்பாக எதிர்ப்பில் ஈடுபட்டு, அமைதியின்மையுடன் செயற்பட்டமை, பொலிஸ் உத்தியோகத்தர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் அரச சொத்துகளுக்கு சேதம் விளைவித்தமை ஆகிய குற்றச்சாட்டுகள்  தேரர் மீது  சுமத்தப்பட்டுள்ளன.

கல்வெவ சிறிதம்ம தேரர், பயங்கரவாத சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த போதிலும், டெங்கு காய்ச்சல் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்