.webp)
Colombo (News 1st) பொருளாதார நெருக்கடிகளால் சவால்களை எதிர்கொள்ளும் இலங்கைக்கு தமது நாடு முக்கியத்துவம் வழங்கும் என சீனா தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஏனைய சர்வதேச பொருளாதார நிதி நிறுவனங்களுடன் சீனா நீண்ட காலமாக சிறந்த ஒத்துழைப்பினை பேணி வருவதாக சீன வௌிவிவகார அமைச்சின் பேச்சாளர் Mao Ning நேற்று (05) நடைபெற்ற கலந்துரையாடலின் போது தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடிக்கு முறையான தீர்வினை வழங்குவதற்காக இலங்கையுடன் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு நிதி நிறுவனங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் சீன வௌிவிவகார அமைச்சின் பேச்சாளர் கூறியுள்ளார்.