தொல்புரம் விவசாயிகளுக்கு யூரியா பகிர்ந்தளிப்பு

அமெரிக்காவால் அன்பளிப்பு செய்யப்பட்ட யூரியா உரம் யாழ். தொல்புரம் விவசாயிகளுக்கு பகிர்ந்தளிப்பு

by Staff Writer 06-12-2022 | 5:17 PM

Colombo (News 1st) இலங்கை விவசாயிகளுக்கு அமெரிக்காவால் அன்பளிப்பு செய்யப்பட்ட யூரியா உரத்தின் ஒரு தொகுதி இன்று யாழ். தொல்புரம் கமநல சேவை நிலையத்திற்குட்பட்ட விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன.

இந்த உரம் யாழ். தொல்புரம் கமநல சேவை பிரிவிற்குட்பட்ட அராலி தென்மேற்கு, அராலி மத்தி, அராலி மேற்கு, அராலி வடக்கு ஆகிய நான்கு  விவசாய சம்மேளன பிரிவிற்குட்பட்ட சுமார் 500 விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. 

12 தொடக்கம் 60 பரப்பு வயல் நிலங்களில் விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு தலா 50 கிலோகிராம் என்ற அடிப்படையில்  உரம் வழங்கி வைக்கப்பட்டது.

சுமார் 9300 மெட்ரிக் தொன் யூரியாவை விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் நேற்று (05) கையளித்தார்.