இன்று(06) முதல் விவசாயிகளுக்கு BANDY உரம்

இன்று(06) முதல் விவசாயிகளுக்கு BANDY உரம்

by Chandrasekaram Chandravadani 06-12-2022 | 9:46 AM

Colombo (News 1st) நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ள BANDY உரத்தை இன்று(06) முதல் விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உரச் செயலகம் தெரிவித்துள்ளது.

ஒரு ஹெக்டேயருக்கு 50 கிலோ கிராம் என்ற அடிப்படையில் BANDY உரம் பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக உரச் செயலகத்தின் பணிப்பாளர் சந்தன லொக்குலியன குறிப்பிட்டார்.

இதனிடையே, நேற்றிரவு(05) நாட்டை வந்தடைந்த மற்றுமொரு கப்பலில் 25,000 மெட்ரிக் தொன் யூரியா உரம் கொண்டுவரப்பட்டுள்ளதாக உரச் செயலகம் தெரிவித்துள்ளது.

நேற்று முன்தினம்(04) 25,000 மெட்ரிக் தொன் யூரியா உரம் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், மொத்தமாக 35,000 மெட்ரிக் தொன் யூரியா உரம் இதுவரையில் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக உரச் செயலகம் குறிப்பிட்டுள்ளது.