சட்டவிரோதமாக வௌிநாடு செல்ல முயன்ற 19 பேர் கைது

சட்டவிரோதமாக வௌிநாடு செல்ல முயன்ற 19 பேர் திருகோணமலையில் கைது

by Staff Writer 05-12-2022 | 3:28 PM

Colombo (News 1st) சட்டவிரோதமாக வௌிநாடு செல்ல முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் 19 பேர் திருகோணமலை - சம்பூர், கொக்கட்டி கடற்பகுதியில் இன்று(05) கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 18 வயதுக்கும் குறைந்த 06 பேர் அடங்குவதாக பொலிஸார் கூறினர்.

யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, களுவாஞ்சிக்குடி, மூதூர், மட்டக்களப்பு மற்றும் வவுனியா ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.