.webp)
Colombo (News 1st) இன்று(05) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் ஒட்டோ டீசலின் விலை 10 ரூபாவால் குறைக்கப்படுவதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
அதற்கமைய, ஒரு லீட்டர் ஒட்டோ டீசலின் புதிய விலை 420 ரூபாவாகும்.
இதனிடையே இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் விலை குறைப்பிற்கு அமைய, லங்கா IOC நிறுவனமும் ஒரு லீட்டர் டீசலின் விலையை 10 ரூபாவால் குறைத்துள்ளது.