.webp)
Colombo (News 1st) ரயில் போக்குவரத்திற்கான நேர அட்டவணைகளில் இன்று(05) முதல் திருத்தம் செய்யப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
ரயில் நேர அட்டவணை பல கட்டங்களாக மாற்றியமைக்கப்படும் என ரயில்வே திணைக்களம் கூறியுள்ளது.
ரயில் சேவையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை காரணமாக, ரயில் தாமதங்கள் தொடர்பிலான அறிக்கைகளை கருத்திற்கொண்டு புதிய நேர அட்டவணைகளை தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.