அமரர் தெளிவத்தை ஜோசப்பின் ஆவண ஆய்வக நிலையம் வத்தளையில் திறந்து வைப்பு

by Staff Writer 04-12-2022 | 4:33 PM

Colombo (News 1st) ஈழத்தின் மூத்த படைப்பாளிகளில் ஒருவரான அமரர் தௌிவத்தை ஜோசப்பின் ஆவண ஆய்வக நிலையமொன்று இன்று(04) வத்தளையில் திறந்து வைக்கப்பட்டது.

சாகித்ய ரத்னா விருது பெற்ற அமரர் தௌிவத்தை ஜோசப் அவர்களின் மனைவி பிலோமினா ஜோசப்பினால் இந்த ஆவண ஆய்வக சேகரிப்பு நிலையம் இன்று(04) திறந்து வைக்கப்பட்டது.

இலங்கையின் தமிழ் இலக்கியத்துறைக்கு மகத்தான சேவையாற்றிய அமரர் தௌிவத்தை ஜோசப் அவர்களின் 40ஆம் நாள் நினைவு தினத்தினை முன்னிட்டு இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அமரர் தௌிவத்தை ஜோசப் சேகரித்த புத்தகங்கள் மற்றும் அவர் பெற்றுக்கொண்ட விருதுகள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன

இந்த நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் மற்றும் அமரர் தௌிவத்தை ஜோசப்பின் குடும்ப உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

ஏனைய செய்திகள்