விரைவில் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் – இரா.சம்பந்தன்

எழுத்தாளர் Staff Writer

04 Dec, 2022 | 8:38 pm

Colombo (News 1st) விரைவில் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் த ஃப்ரொன்ட்லைன்(Frontline) சஞ்சிகைக்கு வழங்கிய விசேட செவ்வியில்  அவர் இதனைக் கூறியுள்ளார்.

தவறாக நாட்டை நிர்வகித்த ஜனாதிபதி ​கோட்டாபய ராஜபக்ஸ போராட்டத்தின் விளைவாக பதவியில் தொடர முடியாத நிலை ஏற்பட்ட போது, துரதிர்ஷ்டவசமாக ரணில் விக்ரமசிங்க தனிப்பட்ட காரணங்களுக்காக அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கியதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஒரு அரசாங்கம் உள்ளதா?, அந்த அரசாங்கம் என்ன? யார் எவருக்கு ஒத்துழைப்பு வழங்குகின்றார்? பொருளாதாரம் தொடர்பிலான அவர்களின் நிலைப்பாடு என்ன? என்ற கேள்விகள் எழுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

தற்போதைய நிலையில், பொதுத் தேர்தல் கட்டாயமாக நடத்தப்பட வேண்டும் எனவும் இதன்மூலம் யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கொள்கைகளை பின்பற்றி வருகின்றார் என தாம் கருதுவதாக இரா.சம்பந்தன் ஃப்ரொன்ட் லைன் சஞ்சிகைக்கு தெரிவித்துள்ளார்.

நாட்டை ஆட்சி செய்த முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ   மற்றும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ ஆகியோரின் நம்பகத்தன்மை கடுமையாக கேள்விக்குள்ளாக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

போராட்டம் உச்சக்கட்டத்தை அடைந்த போது மஹிந்த ராஜபக்ஸ திருகோணமலையில் தலைமறைவாக இருக்கவேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நாட்டை யார் ஆள வேண்டும் என்பதை தீர்மானிக்கும் சந்தர்ப்பம் மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டதாக இரா.சம்பந்தன் கூறியுள்ளார்.

தற்போதைய நிலை தொடர்ந்தால்  நாடு மேலும் மோசமான நிலையை அடையும் என தெரிவித்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் முழு நாடும் எதிர்க்கும் ஒரு தரப்பினர் எவ்வாறு ஆட்சியை தொடர முடியும் என வினவியுள்ளார்.

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

04 Dec, 2022 | 7:21 pm

முல்லைத்தீவு – மாங்குளம் பகுதியில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கும், வீதியில் சென்றுகொண்டிருந்த இருவருக்கும் இடையே ஏற்பட்ட கைகலப்பில் மூவர் காயமடைந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாங்குளம் பகுதியில் நேற்றிரவு வீதியில் சென்றுகொண்டிருந்த ஒருவரை  வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்த முயற்சித்தபோது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

வாக்குவாதம் வலுவடைந்ததை இரண்டு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் காயமடைந்த மாங்குளத்தைச்  சேர்ந்த 22 வயதானவர் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தமது கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக  வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் செய்த முறைபாட்டிற்கு அமைய காயமடைந்தவரின் சகோதரர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, தாக்குதலில் காயமடைந்த  இரண்டு உத்தியோகத்தர்களும் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களத்தின் மாங்குளம் அலுவலகத்தின் அதிகாரி ஒருவர் கூறினார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

விரைவில் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் – இரா.சம்பந்தன்

விரைவில் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் – இரா.சம்பந்தன்

விரைவில் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் – இரா.சம்பந்தன்

எழுத்தாளர் Staff Writer

04 Dec, 2022 | 6:09 pm

Colombo (News 1st) விரைவில் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் த ஃப்ரொன்ட்லைன் சஞ்சிகைக்கு வழங்கிய விசேட செவ்வியில்  அவர் இதனைக் கூறியுள்ளார்.

தவறாக நாட்டை நிர்வகித்த ஜனாதிபதி ​கோட்டாபய ராஜபக்ஸ போராட்டத்தின் விளைவாக பதவியில் தொடர முடியாத நிலை ஏற்பட்ட போது, துரதிர்ஷ்டவசமாக ரணில் விக்ரமசிங்க தனிப்பட்ட காரணங்களுக்காக அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கியதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஒரு அரசாங்கம் உள்ளதா?, அந்த அரசாங்கம் என்ன? யார் எவருக்கு ஒத்துழைப்பு வழங்குகின்றார்? பொருளாதாரம் தொடர்பிலான அவர்களின் நிலைப்பாடு என்ன? என்ற கேள்விகள் எழுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

தற்போதைய நிலையில், பொதுத் தேர்தல் கட்டாயமாக நடத்தப்பட வேண்டும் எனவும் இதன்மூலம் யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கொள்கைகளை பின்பற்றி வருகின்றார் என தாம் கருதுவதாக இரா.சம்பந்தன் ஃப்ரொன்ட் லைன் சஞ்சிகைக்கு தெரிவித்துள்ளார்.

நாட்டை ஆட்சி செய்த முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ   மற்றும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ ஆகியோரின் நம்பகத்தன்மை கடுமையாக கேள்விக்குள்ளாக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

போராட்டம் உச்சக்கட்டத்தை அடைந்த போது மஹிந்த ராஜபக்ஸ திருகோணமலையில் தலைமறைவாக இருக்கவேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நாட்டை யார் ஆள வேண்டும் என்பதை தீர்மானிக்கும் சந்தர்ப்பம் மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டதாக இரா.சம்பந்தன் கூறியுள்ளார்.

தற்போதைய நிலை தொடர்ந்தால்  நாடு மேலும் மோசமான நிலையை அடையும் என தெரிவித்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் முழு நாடும் எதிர்க்கும் ஒரு தரப்பினர் எவ்வாறு ஆட்சியை தொடர முடியும் என வினவியுள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்