.webp)
Colombo (News 1st) வென்னப்புவ - பொரலெஸ்ஸ பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் நீச்சல் தடாகத்தில் நீராடிய சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
தரம் 10 இல் கல்வி கற்கும் 14 வயதான சிறுவனே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
மேலதிக வகுப்பை சேர்ந்த 80 மாணவர்களுடன் சுற்றுலா சென்றிருந்த போது தங்கியிருந்த ஹோட்டலில் உள்ள நீச்சல் தடாகத்தில் நீராடிய போது இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
சடலம் சிலாபம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.