சுந்தர் பிச்சைக்கு பத்ம பூஷன் விருது

சுந்தர் பிச்சைக்கு பத்ம பூஷன் விருது

by Bella Dalima 03-12-2022 | 5:16 PM

Colombo (News 1st) Google நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் சுந்தர் பிச்சைக்கு பத்ம பூஷன் (Padma Bhushan) விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்த விருது வழங்கும் நிகழ்வு கலிபோர்னியாவில் நடைபெற்றது.

அமெரிக்காவிற்கான இந்திய தூதுவர் Taranjit Singh Sandhu  இந்த விருதை வழங்கி வைத்தார்.

இதன்போது, இந்திய அரசுக்கும் இந்திய மக்களுக்கும் நன்றி தெரிவித்த சுந்தர் பிச்சை, Google நிறுவனம் இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சிக்காக 10 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கவுள்ளதாக குறிப்பிட்டார்.

இதனிடையே, சுந்தர் பிச்சையின் உத்வேக பயணத்தை மேற்கோள்காட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து வௌியிட்ட Taranjit Singh Sandhu, இந்த விருதை அவருக்கு வழங்குவதில் தாம் பெருமிதமடைவதாக தெரிவித்துள்ளார்.