அளுத்கமையில் பொலிஸ் உத்தியோகத்தரின் வீட்டில் ஆயுதமேந்திய குழு கொள்ளை

அளுத்கமையில் பொலிஸ் உத்தியோகத்தரின் வீட்டில் ஆயுதமேந்திய குழு கொள்ளை

எழுத்தாளர் Bella Dalima

03 Dec, 2022 | 6:58 pm

Colombo (News 1st) அளுத்கம – பொந்துபிட்டியவில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டில் ஆயுதமேந்திய குழுவொன்று கொள்ளையடித்துள்ளது.

வடக்கு களுத்துறை பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவரின் வீட்டில் இன்று காலை 10.30 மணியளவில் இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஆயுதம் ஏந்திய 5 பேர் கொண்ட கொள்ளைக் கும்பல் வீட்டுக்குள் புகுந்து 2 கையடக்க தொலைபேசிகள் மற்றும் தங்க மோதிரத்தை திருடிச்சென்றுள்ளதாக பொலிஸார் கூறினர்.

சம்பவம் தொடர்பில் வெலிப்பென்ன பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்