Fitch Ratings: CCC தரத்தில் இருந்து CC தரத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ள இலங்கை

Fitch Ratings: CCC தரத்தில் இருந்து CC தரத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ள இலங்கை

Fitch Ratings: CCC தரத்தில் இருந்து CC தரத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ள இலங்கை

எழுத்தாளர் Staff Writer

02 Dec, 2022 | 6:29 pm

Colombo (News 1st) Fitch Ratings நிறுவனம் இலங்கையின் நீண்ட கால உள்நாட்டு கடன் வெளியீட்டு மதிப்பீடுகளை மேலும் குறைத்துள்ளது.

அதன்படி, மதிப்பீடு CCC தரத்தில் இருந்து CC தரத்திற்கு குறைக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் நீண்ட கால உள்நாட்டுக் கடன் மதிப்பீட்டைக் குறைப்பதாக Fitch Ratings நிறுவனம் தமது புதிய மதிப்பீட்டில் சுட்டிக்காட்டியுள்ளது.

அதிக வட்டி வீதம் மற்றும் இறுக்கமான உள்நாட்டு நிதி நிலைமைகள் காரணமாக இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது. 

உள்நாட்டுக் கடன்களுக்கு ஏற்றுக்கொள்ள முடியாதளவு அதிக வட்டி விகிதங்களை செலுத்த வேண்டிய நிலை தொடர்பிலும் அந்நிறுவனம் கவனம் செலுத்தியுள்ளது. 
 
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்