உக்ரைனுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்த தயார்: ரஷ்ய ஜனாதிபதி அறிவிப்பு

உக்ரைனுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்த தயார்: ரஷ்ய ஜனாதிபதி அறிவிப்பு

உக்ரைனுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்த தயார்: ரஷ்ய ஜனாதிபதி அறிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

02 Dec, 2022 | 6:17 pm

Ukraine: உக்ரைனுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்த தாம் தயார் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமர் புட்டின் (Vladimir Putin) தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ரஷ்ய ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ள தயார் என கூறியதையடுத்தே, அவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

உக்ரைனில் இருந்து  ரஷ்ய படைகளை வௌியேற்றுவதே இரு நாடுகளுக்கும் இடையிலான  யுத்தத்தை நிறைவு செய்வதற்கான ஒரே வழி என ஜோ பைடன் தெரிவித்திருந்தார்.

எனினும், ரஷ்ய ஜனாதிபதி உக்ரைனுடனான பேச்சுவார்த்தைக்கு மாத்திரமே தயார் எனவும் ரஷ்ய படைகள் உக்ரைனை விட்டு வௌியேறாது எனவும் அந்நாட்டு இராணுவப்பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்