இலங்கை துறைமுகங்கள் அதிகார சபையில் ஊழல் மோசடிகளை ஆராய குழு நியமனம்

இலங்கை துறைமுகங்கள் அதிகார சபையில் ஊழல் மோசடிகளை ஆராய குழு நியமனம்

இலங்கை துறைமுகங்கள் அதிகார சபையில் ஊழல் மோசடிகளை ஆராய குழு நியமனம்

எழுத்தாளர் Staff Writer

02 Dec, 2022 | 4:03 pm

Colombo (News 1st) இலங்கை துறைமுகங்கள் அதிகார சபையின் ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பில் ஆராய்வதற்காக விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. 

இந்த குழுவில் மூன்று உறுப்பினர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் K.D.S. ருவன் சந்திர தெரிவித்தார். 

M.D.S.A. பெரேரா, காமினி குமாரசிறி மற்றும் K.G.G.வசந்த கமகே ஆகியோரே இந்த குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ளனர். 

துறைமுகங்கள் அதிகார சபை தொழிற்சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏனைய தரப்பினரும் இந்த விடயம் தொடர்பில் முறைப்பாடுகளை முன்வைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கிடைக்கும் அனைத்து முறைப்பாடுகளையும் விசாரணைக்கு உட்படுத்தி ஆறு மாதங்களுக்குள் அறிக்கையை தயாரித்து விடயத்திற்கு பொறுப்பான அமைச்சருக்கு ஒப்படைக்கவுள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் கூறினார். 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்