இன்று (02) இரவு முதல் கொழும்பின் பல பகுதிகளில் 15 மணித்தியால நீர்வெட்டு

இன்று (02) இரவு முதல் கொழும்பின் பல பகுதிகளில் 15 மணித்தியால நீர்வெட்டு

இன்று (02) இரவு முதல் கொழும்பின் பல பகுதிகளில் 15 மணித்தியால நீர்வெட்டு

எழுத்தாளர் Bella Dalima

02 Dec, 2022 | 4:52 pm

Colombo (News 1st) இன்று (02) இரவு 10 மணி முதல் நாளை (03) பிற்பகல் ஒரு மணி வரை  கொழும்பின் பல பகுதிகளில் 15 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படுமென சபை கூறியுள்ளது.

இதனால் தேவையான நீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

அம்பத்தலே எரிசக்தி மேம்பாட்டுத் திட்டத்துடன் தொடர்புடைய அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக நீர்வெட்டு அமுல்படுத்தப்படுவதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்