.webp)
Colombo (News 1st) யாழ்ப்பாணம் - வரணி, குடமியன் பகுதியில் குளத்தில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (30) மாலை குளத்தில் குளிக்கச்சென்றவரே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நீரில் மூழ்கியவர் இன்று (01) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலம் சாவகச்சேரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
வரணி, குடமியன் பகுதியை சேர்ந்த 37 வயதான ஒருவரே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
கொடிகாமம் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.