.webp)
Colombo (News 1st) பேலியகொடை கறுத்த பாலத்திற்கு அருகில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
119 எனும் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த தகவலுக்கமைய, விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் சுமார் 60 வயது மதிக்கத்தக்கவர் எனவும் 5 அடி உயரமுடையவர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
உயிரிழந்த நபர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.