.webp)
Colombo (News 1st) பொகவந்தலாவையில் உள்ள தேயிலைத் தோட்டம் ஒன்றில் இருந்து சிறுத்தையின் உடல் மீட்கப்பட்டுள்ளது.
பொறியில் சிக்கி உயிரிழந்த சிறுத்தை பொகவந்தலாவையில் உள்ள தேயிலைத் தோட்டத்திற்கு கொண்டுவரப்பட்டிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுத்தையின் பற்கள், தோல், பாதம் என்பன உடலிலிருந்து அகற்றப்பட்டிருந்தன.
நல்லதண்ணி வனஜீவராசிகள் திணைக்களத்தினர் மற்றும் பொலிஸார் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.