தகுதியற்ற பலர் சமுர்த்தி கொடுப்பனவு பெறுவதாக ஜனாதிபதி தெரிவிப்பு

by Bella Dalima 01-12-2022 | 7:56 PM

Colombo (News 1st) தகுதியற்ற பலர் சமுர்த்தி கொடுப்பனவு பெறுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். 

வரவு  செலவுத் திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை கூறினார். 

சமுர்த்தி கொடுப்பனவிற்கு தகுதியுடைய பலருக்கு கொடுப்பனவை வழங்க முடியாத நிலை உள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, தகுதியற்ற சிலர் சமுர்த்தி கொடுப்பனவை பெறுவதில் இருந்து நீக்கப்பட்டால், தகுதியுடையவர்களுக்கு அதனை வழங்கலாம் என கூறினார். 
 
கல்வி , மகளிர் , சிறுவர்  விவகார அமைச்சுகளுக்கான ஒதுக்கீடுகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு,  கல்வி மறுசீரமைப்பு தொடர்பிலும் ஜனாதிபதி கருத்து வௌியிட்டார். 

இதன்போது, 2023 ஆம் ஆண்டிலிருந்து 25 வருடங்களுக்கு முன்னோக்கி செல்லக்கூடிய பாடசாலை முறைமை தேவைப்படுவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.