.webp)
Colombo (News 1st) யாழ்ப்பாணம் - அரியாலையில் ரயிலுடன் பஸ் மோதி விபத்திற்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ரயிலில் தனியார் பஸ் மோதி இன்று நண்பகல் 12.30 அளவில் விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது, பஸ்ஸின் சாரதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.
உயிரிழந்தவரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.