பாணந்துறை துப்பாக்கிச் சூடு: சட்டத்தரணி உள்ளிட்ட மூவர் கைது

பாணந்துறை துப்பாக்கிச் சூடு: சட்டத்தரணி உள்ளிட்ட மூவர் கைது

பாணந்துறை துப்பாக்கிச் சூடு: சட்டத்தரணி உள்ளிட்ட மூவர் கைது

எழுத்தாளர் Staff Writer

01 Dec, 2022 | 11:37 am

Colombo (News 1st) பாணந்துறை, சில்வன் ஒழுங்கையில் நேற்றிரவு(30) நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் 03 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் சட்டத்தரணி ஒருவரும் அடங்குவதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் குறிப்பிட்டார்.

பணக் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வலுப்பெற்றதை அடுத்து, சந்தேகநபரான சட்டத்தரணியால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிப் பிரயோகத்திற்கு பயன்படுத்தப்பட்ட அனுமதிப்பத்திரத்துடனான கைத்துப்பாக்கி மற்றும் சட்டத்தரணியின் வாகனம் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

துப்பாக்கிப் பிரயோகத்தின் போது எவருக்கும் காயம் ஏற்படவில்லை.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்