கொழும்பின் பல பகுதிகளில் நாளை(02) 15 மணி நேர நீர் வெட்டு

கொழும்பின் பல பகுதிகளில் நாளை(02) 15 மணி நேர நீர் வெட்டு

கொழும்பின் பல பகுதிகளில் நாளை(02) 15 மணி நேர நீர் வெட்டு

எழுத்தாளர் Staff Writer

01 Dec, 2022 | 10:03 am

Colombo (News 1st) கொழும்பின் பல பிரதேசங்களில் நாளை(02) இரவு 10 மணி முதல் மறுநாள் நண்பகல் ஒரு மணி வரை 15 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதற்கமைய, கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படுமென சபை கூறியுள்ளது.

எனவே தேவையான நீரை முன்கூட்டியே சேமித்து வைத்துக்கொள்ளுமாறு தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை, பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

அம்பதலே எரிசக்தி மேம்பாட்டுத் திட்டத்துடன் தொடர்புடைய அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படுவதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்