எலிக்காய்ச்சல் பரவும் வீதம் அதிகரிப்பு

எலிக்காய்ச்சல் பரவும் வீதம் அதிகரிப்பு

by Staff Writer 01-12-2022 | 8:08 AM

Colombo (News 1st) மழை காரணமாக விவசாயப் பகுதிகளை அண்மித்த பிரதேசங்களில் எலிக்காய்ச்சல் பரவும் வீதம் அதிகரித்துள்ளதாக சுகாதாரப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக நெற்செய்கையில் ஈடுபடும் போது சிறுநீரக நோயாளர்கள் மற்றும் கல்லீரலுடன் தொடர்புடைய நோய் தொற்றுக்குள்ளானவர்கள் இந்த விடயம் தொடர்பில் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

வயல்களை அண்மித்த பகுதிகளில் துப்பரவு பணிகளில் ஈடுபடும் போது அவதானத்துடன் இருக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு முன்னர், குறித்த பகுதிகளிலுள்ள சுகாதார பணிமனைகளில் தேவையான ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளுமாறு விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் கோரிக்கை விடுத்துள்ளார்.