.webp)
Afghanistan: ஆப்கானிஸ்தானின் வடக்கு சமங்கன் மாகாணத்தில் அய்பக் ( Aybak) நகரில் உள்ள மதரசா பாடசாலையில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் 19 மாணவர்கள் பலியாகியுள்ளனர். 24 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அனைத்து ஆப்கானிஸ்தான் குழந்தைகளுக்கும் பயமின்றி பாடசாலை செல்ல உரிமை உண்டு என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இத்தாக்குதலுக்கு உடனடியாக எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய பிறகு IS பயங்கரவாத அமைப்பு அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது.