மட்டக்களப்பை சிறந்த சுற்றுலாத்தலமாக மாற்றுவது தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்

by Bella Dalima 30-11-2022 | 7:31 PM

Colombo (News 1st) மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான இடங்களை தெரிவு செய்வது தொடர்பிலான கலந்துரையாடல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று நடைபெற்றது. 

மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் கே. கருணாகரம் உள்ளிட்ட பிரதேச செயலாளர்கள் சிலர் Zoom தொழில்நுட்பத்தின் ஊடாக இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்தனர். 

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெருகல் ஆறு முதல் மட்டக்களப்பு வரையான கடற்கரையை அண்மித்த அரச மற்றும் தனியார் இடங்களை அடையாளம் காண்பது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. 

குறித்த பகுதியை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்து 2023 ஆம் ஆண்டில் மட்டக்களப்பை சிறந்த சுற்றுலாத்தலமாக மாற்றுவதே இதன் நோக்கம் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.