கொள்ளையிட முற்பட்டவர்களை மடக்கிப்பிடித்த மக்கள்

கொள்ளையிட முற்பட்ட 6 சந்தேகநபர்களை மடக்கிப்பிடித்த பிரதேசவாசிகள்

by Staff Writer 30-11-2022 | 11:04 AM

Colombo (News 1st) முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட 6 சந்தேகநபர்கள் பிரதேச மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 

புதுக்குடியிருப்பு - சிவநகர் பகுதியில் வீடொன்றை உடைத்து கொள்ளையிட முற்பட்டவர்களே பிரதேச மக்களால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளனர்.

பிரதேச மக்களால் பிடிக்கப்பட்ட 6 சந்தேகநபர்களும் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் பலத்த காயங்களுக்குள்ளான ஒருவர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் கூறினார்.

புதுக்குடியிருப்பு - இரணைப்பாலை பகுதியை சேர்ந்த ஒருவரும் யாழ்.சங்கானை பகுதியை சேர்ந்த ஐவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களை இன்று(30) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.