இங்கிலாந்து, அமெரிக்கா சுப்பர் 16 சுற்றுக்கு தகுதி

உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடர்: இங்கிலாந்து, அமெரிக்க அணிகள் சுப்பர் 16 சுற்றுக்கு தகுதி

by Staff Writer 30-11-2022 | 7:54 AM

Colombo (News 1st) உலகக் கிண்ண கால்பந்தாட்டத் தொடரில் ஈரானுடனான போட்டியில் அமெரிக்கா 1 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியுடன் அமெரிக்கா சுப்பர் 16 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

இதனிடையே, வேல்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய(29) போட்டியில் இங்கிலாந்து 3 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியது. 

இந்த வெற்றியுடன் சுப்பர் 16 சுற்றில் விளையாடும் வாய்ப்பை இங்கிலாந்து உறுதிப்படுத்திக் கொண்டது.