சொந்த விண்வௌி நிலையத்தை அமைக்கும் பணிக்காக மூவரை அனுப்பி வைத்தது சீனா

சொந்த விண்வௌி நிலையத்தை அமைக்கும் பணிக்காக மூவரை அனுப்பி வைத்தது சீனா

சொந்த விண்வௌி நிலையத்தை அமைக்கும் பணிக்காக மூவரை அனுப்பி வைத்தது சீனா

எழுத்தாளர் Bella Dalima

30 Nov, 2022 | 5:09 pm

China: சீனா சொந்தமாக நிறுவி வரும் Tiangong விண்வெளி நிலையத்திற்கு மூவரை வெற்றிகரமாக நேற்று (29) அனுப்பி வைத்துள்ளது. 

Fei Junlong, Deng Qingming மற்றும் Zhang Lu ஆகிய மூன்று வீரா்களை ஏற்றிக்கொண்டு Shenzhou-15 விண்கலம்  Long March-2F – Y15 ஏவுகணை மூலம் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.

அந்த விண்கலம் புதிய வீரா்களை ஆய்வு நிலையத்தில் விட்டுவிட்டு, 5 நாட்களுக்குப் பிறகு அங்கு ஏற்கெனவே உள்ள 3 விண்வௌி வீரா்களை ஏற்றிக்கொண்டு பூமி திரும்பவிருக்கிறது. 

சீன விண்வெளி ஆய்வு வரலாற்றில் வீரா்கள் மாற்றிக்கொள்ளப்படுவது இதுவே முதன்முறையாகும்.

தனக்கென்று சொந்தமாக சீனா அமைத்து வரும் Tiangong விண்வெளி நிலையம் இந்த ஆண்டு இறுதிக்குள் செயற்படத் தொடங்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

விண்வெளியில் தங்கியிருந்து ஆய்வு செய்யும் பணிக்காக பல நாடுகளுடன் இணைந்த கூட்டுத் திட்டத்தின்படி ரஷ்யா சர்வதேச விண்வெளி நிலையத்தை அமைத்துள்ளது. 

நீண்ட கால ஆய்வுக்கு பின்னர் அடுத்த சில ஆண்டுகளில் ரஷ்யாவின் விண்வெளி நிலையம் ஓய்வு பெறும் என கூறப்படுகிறது. 
இதையடுத்து, ரஷ்யாவிற்கு போட்டியாக புவி சுற்றுப்பாதையில் விண்வெளி நிலையம் அமைக்கும் பணிகளில் சீனா தீவிரம் காட்டி வருகிறது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்