English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
30 Nov, 2022 | 6:27 pm
Colombo (News 1st) காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள பயனுள்ள தீர்வுகளை வழங்கக்கூடிய நாடுகள் அவ்விடயத்தில் நேரடியாக தலையிடாவிட்டால் மனித குலத்தின் எதிர்கால இருப்பை தக்கவைத்துக்கொள்வதில் அச்சுறுத்தல் ஏற்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அரசியல்மயப்படுத்தலும் காலதாமதமுமே COP27 மாநாட்டின் வெற்றிக்கு மிகப்பெரும் தடை எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
COP27 உடன்படிக்கை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
மிகப்பெரிய சேதத்திற்கு வரலாற்று ரீதியாக பொறுப்புக்கூற வேண்டிய நாடுகள் மற்றும் அர்த்தமுள்ள பங்களிப்புகளை வழங்கக்கூடிய நாட்டு தலைமைகள் சமூகமளிக்காமையானது, காலநிலை தொடர்பான நடவடிக்கைகளின் முன்னேற்றத்தைத் தடுப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது இடம்பெற்று வரும் பேரழிவுகளை வரும் முன்னரே தடுப்பதற்காக 100 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியுதவி எனும் இலக்கை அடைவதனை கருத்திற்கொண்டு நாம் முயற்சி செய்ய வேண்டுமெனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
காலநிலை மாற்றத்திற்கான உலகளாவிய செயற்திட்டங்களை வலுப்படுத்துவதற்கான ஒரு வருட பணிக்கான ஒப்புதல் முத்திரையாக இது இருக்க வேண்டும் என்பதுடன், ஆற்றல் துறைக்கு ஒரு முக்கியத்துவம் கொடுக்கும் ஆரம்பமாக வேண்டுமெனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
மாநாட்டில் பங்கெடுக்கும் தரப்பினருடன் தொடர்புடைய வகையில், COP28 இல் நிலைபேண்தகு முன்னேற்றம் காணப்பட வேண்டுமென அவர் கூறியுள்ளார்.
அவ்வாறு இல்லாவிட்டால், COP அமைப்பை கலைப்பதே சிறந்ததென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
03 Feb, 2023 | 08:15 PM
03 Feb, 2023 | 07:41 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS