மாவட்ட அபிவிருத்தி சபை முறைமை மீள ஆரம்பிக்கப்படும்

மாவட்ட அபிவிருத்தி சபை முறைமையை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக ஜனாதிபதி அறிவிப்பு

by Bella Dalima 29-11-2022 | 3:15 PM

Colombo (News 1st) மாவட்ட அபிவிருத்தி சபை முறைமையை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் இன்று (29) அறிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே ஜனாதிபதி இதனை கூறினார்.

ஜனாதிபதியின் இந்த அறிவிப்பை ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி வரவேற்பதாக இதன்போது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

அத்துடன், மாவட்ட அபிவிருத்தி சபை முறைமையின் ஊடாகவே நாட்டிற்கு நன்மை கிடைக்குமெனவும் அவர் கூறினார்.

வீணாக செலவாகும் பாரியளவிலான நிதியை இதனூடாக பாதுகாக்க முடியுமெனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்தார்.