.webp)
Colombo (News 1st) பிக்குகளாக பல்கலைக்கழகங்களுக்குள் பிரவேசிக்கும் பலர் சாதாரண மாணவர்களாக பட்டத்தை பெற்றுக்கொள்வதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.
வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு, உரையாற்றிய ஜனாதிபதி இந்த நிலைமையை தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளதாகக் கூறினார்.
வரவு செலவுத் திட்ட விவாதத்தின் ஆறாம் நாளான இன்று புத்தசாசன, மத, கலாசார விவகாரங்கள், சுகாதார அமைச்சுகளுக்கான ஒதுக்கீடுகள் தொடர்பில் விவாதிக்கப்பட்டது.