மஹவ - யாழ்ப்பாணம் ரயில் போக்குவரத்து இடைநிறுத்தம்?

மஹவ - யாழ்ப்பாணம் வரையான ரயில் போக்குவரத்தை 5 மாதங்களுக்கு இடைநிறுத்த தீர்மானம்

by Chandrasekaram Chandravadani 28-11-2022 | 3:01 PM

Colombo (News 1st) மஹவ தொடக்கம் யாழ்ப்பாணம் வரையான ரயில் போக்குவரத்தை 05 மாதங்களுக்கு இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

ரயில் மார்க்கத்தின் புனரமைப்பு பணி காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், 2023 ஜனவரி 15ஆம் திகதி முதல் குறித்த மார்க்கத்திலான ரயில் போக்குவரத்து இடைநிறுத்தப்படவுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.