டயனா கமேகேவின் குடியுரிமை தொடர்பான ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உத்தரவு

டயனா கமேகேவின் குடியுரிமை தொடர்பான ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உத்தரவு

எழுத்தாளர் Staff Writer

28 Nov, 2022 | 2:26 pm

Colombo (News 1st) இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள எழுத்தாணை மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று(28) அனுமதி வழங்கியுள்ளது.

இராஜாங்க அமைச்சர் டயனா கமகே, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், பாராளுமன்ற செயலாளர் நாயகம், சட்ட மா அதிபர் உள்ளிட்ட 15 பேர் மனுவின் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

பிரதிவாதிகளுக்கு அறிவித்தல் அனுப்புமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதிகளான சோபித்த ராஜகருணா மற்றும் தம்மிக்க கனேபொல ஆகியோரடங்கிய நீதிபதிகள் குழு உத்தரவிட்டுள்ளது. 

மனு மீதான பரிசீலனையை எதிர்வரும் 12ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், டயனா கமகேவின் குடியுரிமை தொடர்பான அனைத்து ஆவணங்களையும் உடனடியாக சமர்ப்பிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம், குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கு இன்று(28) உத்தரவிட்டது.

பிரித்தானிய பிரஜையான டயனா கமகே, பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகிப்பதற்கு தகுதியற்றவர் என தீர்மானிக்குமாறும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்யுமாறும் கோரி, ஓசத லக்மால் ஹேரத்தினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்