பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்பான அறிவித்தல்

கல்வி ஆண்டு நிறைவடைந்தும் விடுதிகளில் தங்கியுள்ள பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஆலோசனை

by Staff Writer 27-11-2022 | 2:47 PM

Colombo (News 1st) தமது கற்றல் கால எல்லையை கடந்துள்ள 05 வீதமான மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்குள் தங்கியிருப்பதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது சட்டவிரோத செயல் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.

அவ்வாறான மாணவர்களுக்கு எதிராக தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்து துணை வேந்தர்களுக்கும் அவர் குறிப்பிட்டார்.