சிவாச்சாரியார் சிவஸ்ரீ மணி சிவானந்த குருக்களின் பூதவுடல் அக்கினியில் சங்கமமானது…

சிவாச்சாரியார் சிவஸ்ரீ மணி சிவானந்த குருக்களின் பூதவுடல் அக்கினியில் சங்கமமானது…

எழுத்தாளர் Staff Writer

27 Nov, 2022 | 7:39 pm

Colombo (News 1st) மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான பிரதம சிவாச்சாரியார் சிவஸ்ரீ மணி சிவானந்த குருக்களின் பூதவுடல் இன்று(27) அக்கினியில் சங்கமமானது.

கடந்த இரண்டு நாட்களாக சிவஸ்ரீ மணி சிவானந்த குருக்களின் பூதவுடல் மாத்தளை களுதாவளையிலுள்ள அன்னாரின் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

அன்னாரது இல்லத்தில் இன்று(27) காலை ஆகம முறைகளுக்கு அமைய இறுதிக் கிரியைகள் நடைபெற்றன.

அத்தோடு சர்வ மத அனுஷ்டானங்களும் நடைபெற்றன.

அதனைத் தொடர்ந்து  சிவானந்த குருக்களின் இறுதி ஊர்வலம் மாத்தளை நகரின் ஊடாக முன்னெடுக்கப்பட்டது. 

பின்னர் மாத்தளை – களுதாவளை இந்து மயானத்தில் அன்னாரின் பூதவுடல் அக்கினியில் சங்கமமானது.

பல தசாப்தங்களாக மாத்தளை அருள்மிகு ஶ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் பிரதம சிவாச்சாரியாராகவும் முன்னேஸ்வரம் தேவஸ்தான மகோற்சவ குருவாகவும் சிவஸ்ரீ மணி சிவானந்த குருக்கள் இறைபணி ஆற்றியிருந்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்