10.6 மில்லியன் லிட்டர் டீசலுடன் Super Eastern கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை

10.6 மில்லியன் லிட்டர் டீசலுடன் Super Eastern கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை

10.6 மில்லியன் லிட்டர் டீசலுடன் Super Eastern கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை

எழுத்தாளர் Bella Dalima

26 Nov, 2022 | 6:52 pm

Colombo (News 1st) சீன அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ள 10.6 மில்லியன் லிட்டர் டீசலை ஏற்றிய SUPER EASTERN எரிபொருள் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

மாதிரி பரிசோதனையின் பின்னர் டீசலை தரையிறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பிலுள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

குறித்த டீசலை விவசாய மற்றும் மீனவ நடவடிக்கைகளுக்காக பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

விவசாய அமைச்சு மற்றும் கடற்றொழில் திணைக்களத்தின் பரிந்துரைகளுக்கு அமைவாக டீசலை இலவசமாக விநியோகிக்கவுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்