.webp)
Colombo (News 1st) நாட்டில் மதுபாவனை 30 வீதத்தினால் குறைவடைந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்தார்.
எவ்வாறாயினும், அனுமதி பெற்ற மதுபான உற்பத்தி 11 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
உணவிற்கான அதிகளவு பணவீக்கம் உள்ளிட்ட காரணங்களால் மது பாவனை குறைவடைந்திருக்கலாம் என இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய குறிப்பிட்டார்.
இதனிடையே, 2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் மதுபானத்தினால் கிடைக்கும் வரி வருமானம் 20 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை, சட்டவிரோத மதுபானங்கள் சந்தைக்கு கொண்டுவரப்படும் அளவு தற்போது குறைவடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
சட்டவிரோத மதுபானங்களை அடையாளப்படுத்துவதற்கு வழங்கப்பட்டுள்ள ஸ்டிக்கர் அறிமுகப்படுத்தப்பட்டமையே இதற்கு காரணம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதன் ஊடாகவும் அரச வருமானம் அதிகரித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்தார்.