.webp)
Colombo (News 1st) 2021 கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறு சான்றிதழ்களை எதிர்வரும் திங்கட்கிழமை (28) முதல் பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் L.M.D.தர்மசேன தெரிவித்தார்.
ஒன்லைன் முறையில் அதற்கான வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
2021 கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை மே மாதம் 23 ஆம் திகதியிலிருந்து ஜூன் மாதம் முதலாம் திகதி வரை இடம்பெற்றது.
பரீட்சையில் 5,04,245 மாணவர்கள் தோற்றியிருந்தனர்.
இவர்களில் 4,07,785 பேர் பாடசாலை பரீட்சார்த்திகளாவர்.