இராணுவ முகாம்கள், பாடசாலை கட்டடங்கள், அரச அலுவலகங்களில் சூரிய மின்கலங்களை பொருத்த நடவடிக்கை

இராணுவ முகாம்கள், பாடசாலை கட்டடங்கள், அரச அலுவலகங்களில் சூரிய மின்கலங்களை பொருத்த நடவடிக்கை

இராணுவ முகாம்கள், பாடசாலை கட்டடங்கள், அரச அலுவலகங்களில் சூரிய மின்கலங்களை பொருத்த நடவடிக்கை

எழுத்தாளர் Bella Dalima

26 Nov, 2022 | 6:03 pm

Colombo (News 1st) நாட்டில் அடையாளங்காணப்பட்ட இராணுவ முகாம்கள், பாடசாலை கட்டடங்கள் மற்றும் அரச அலுவலகங்களில் சூரிய மின்கலங்களை பொருத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்தினால் நாட்டின் சூரிய மின்னுற்பத்தி மேம்பாட்டிற்காக வழங்கப்பட்ட கடனுதவியின் ஊடாக இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

சூரிய மின்கலங்கள் பொருத்தப்பட வேண்டிய இடங்கள் தொடர்பான ஆவணமொன்று, தற்போது இந்திய உயர்ஸ்தானிகராலயத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைவாக, இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடாக சூரிய மின்கலங்களை பொருத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்