.webp)
Colombo (News 1st) 2022 உலகக்கிண்ண கால்பந்தாட்டத் தொடரில் வேல்ஸூக்கு எதிரான போட்டியில் ஈரான் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியின் ஆரம்பம் முதலே இரு அணிகளுக்குமிடையில் விறுவிறுப்பான போட்டி காணப்பட்டது.
முதல் பாதியின் முடிவில் இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை.
எனினும், இரண்டாவது பாதியில் சிறப்பான ஆட்டத்தை வௌிப்படுத்திய ஈரான் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.