.webp)
Colombo (News 1st) அரசியலமைப்பு சபைக்கு பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனின் பெயரை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பரிந்துரை செய்துள்ளது.
அரசியலமைப்பு சபைக்கு சிறிய மற்றும் சிறுபான்மை தரப்பின் சார்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தனின் பெயரை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பரிந்துரைத்துள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழு கூடியபோது, அரசியலமைப்பு சபைக்கான சிறுபான்மை தரப்பின் பிரதிநிதி தொடர்பில் ஆராயப்பட்ட நிலையில், இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
