பாடசாலை ஆசிரியர்களுக்கான ஆடை தொடர்பில் இதுவரை கொள்கை ரீதியான தீர்மானங்கள் இல்லை: கல்வி அமைச்சு

பாடசாலை ஆசிரியர்களுக்கான ஆடை தொடர்பில் இதுவரை கொள்கை ரீதியான தீர்மானங்கள் இல்லை: கல்வி அமைச்சு

பாடசாலை ஆசிரியர்களுக்கான ஆடை தொடர்பில் இதுவரை கொள்கை ரீதியான தீர்மானங்கள் இல்லை: கல்வி அமைச்சு

எழுத்தாளர் Staff Writer

25 Nov, 2022 | 4:34 pm

Colombo (News 1st) பாடசாலை ஆசிரியர்களுக்கான ஆடை தொடர்பில் இதுவரை கொள்கை ரீதியான எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் தற்போது கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க தெரிவித்தார்.

எவ்வாறாயினும், இதுவரை காலம் காணப்பட்ட முறைக்கு அமையவே, பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் சமூகமளிக்க வேண்டும் என அவர் கூறினார்.

விரும்பிய ஆடையில் ஆசிரியர்கள் சிலர் பாடசாலைக்கு சென்றமை தொடர்பில் விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.

விசாரணைகளின் பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க சுட்டிக்காட்டினார். 

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்