கிராண்ட்பாஸில் ஒன்றரை வயது குழந்தையை மூன்றாம் மாடியிலிருந்து கீழே வீசி கொலை செய்தவர் கைது

கிராண்ட்பாஸில் ஒன்றரை வயது குழந்தையை மூன்றாம் மாடியிலிருந்து கீழே வீசி கொலை செய்தவர் கைது

எழுத்தாளர் Bella Dalima

25 Nov, 2022 | 5:19 pm

Colombo (News 1st) ஒன்றரை வயது குழந்தையை மூன்றாம் மாடியிலிருந்து கீழே வீசி கொலை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கொழும்பு – கிராண்ட்பாஸ், சமகிபுர தொடர்மாடி குடியிருப்பின் மூன்றாம் மாடியிலிருந்து குறித்த நபர் குழந்தையை கீழே வீசியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.  

கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த குழந்தையை அந்நபர் ஜன்னலூடாக கீழே வீசியுள்ளார். 

இதில் பலத்த காயங்களுக்குள்ளான குழந்தை, ரிட்ஜ்வே வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளது.

சந்தேகநபர் உயிரிழந்த குழந்தையின் தாயின் சகோதரர் (35 வயது) என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

மேலதிக விசாரணைகளை கிராண்ட்பாஸ் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்