பிரேஸில் ஜனாதிபதியின் முறைப்பாடு நிராகரிப்பு

பிரேஸில் ஜனாதிபதியின் கட்சி முன்வைத்த முறைப்பாட்டை நிராகரித்த நீதிமன்றம்

by Chandrasekaram Chandravadani 24-11-2022 | 10:59 AM

Colombo (News 1st) பிரேஸில் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளுக்கு எதிராக அந்நாட்டு ஜனாதிபதி ஜெய்ர் பொல்சொனாரோவின் (Jair Bolsonaro) தீவிர வலதுசாரி கட்சியினால் தாக்கல் செய்யப்பட்ட மனு தேர்தல் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. 

முன்னாள் இடதுசாரி கட்சியின் தலைவர் லுய்ஸ் இனசியோ லுலா த சில்வாவிடம் (Luiz Inacio Lula da Silva) மிகக் குறுகிய வாக்கு வித்தியாசத்தில் அவர் தோல்வியடைந்தார். 

அதனையடுத்து மின்னணு வாக்களிப்பு இயந்திரங்களில் முறைகேடு இடம்பெற்றிருப்பதாகத் தெரிவித்து அவர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார். 

எனினும் அவரது மனு நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளதுடன் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து இடதுசாரி கட்சியின் தலைவர் Luiz Inacio Lula da Silva எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி பிரேஸில் ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ளார்.