கப்ராலுக்கு வௌிநாட்டு பயணத்தடை நீடிப்பு

அஜித் நிவாட் கப்ராலுக்கு விதிக்கப்பட்டுள்ள வௌிநாட்டு பயணத்தடை நீடிப்பு

by Chandrasekaram Chandravadani 24-11-2022 | 11:46 AM

Colombo (News 1st) மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பயணத்தடை எதிர்வரும் டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி வரை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. 

முன்னாள் ஆளுநர் கீர்த்தி தென்னகோனால் அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள தனிப்பட்ட மனு, கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெக்குணுவெல முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

அஜித் நிவாட் கப்ரால், மத்திய வங்கியின் ஆளுநராக செயற்பட்டபோது அவர் மேற்கொண்ட தீர்மானங்களே நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிக்கு காரணமாக அமைந்துள்ளதாக தெரிவித்து முன்னாள் ஆளுநர் கீர்த்தி தென்னகோனால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.