பெண்களை பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அதிகாரியை நாட்டிற்கு அனுப்புமாறு ஓமான் தூதரகத்திற்கு அறிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

24 Nov, 2022 | 7:52 am

Colombo (News 1st) ஓமானில் பெண்களை பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள ஓமானிலுள்ள இலங்கை தூதரகத்தின் முன்னாள் மூன்றாம் நிலை செயலாளர் E.குஷான் என்பவரை நாட்டிற்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை விரைந்து முன்னெடுக்குமாறு ஓமான் தூதரகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

குறித்த நபரை நாட்டிற்கு அனுப்பும் திகதி தொடர்பில் ஓமானிலுள்ள இலங்கை தூதரகத்தினால் இதுவரை அறிவிக்கப்படவில்லை என வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப் பேச்சாளர், பிரதி பொதுமுகாமையாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்துள்ளார்.

குறித்த நபரை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலைப்படுத்துமாறு வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு பொலிஸார் எழுத்து மூலம் அறிவித்துள்ளனர்.  

இதனிடையே, ஓமானில் உள்ள இலங்கை தூதரகத்தின் முன்னாள் மூன்றாம் நிலை செயலாளர், பெண்களுக்கு அழுத்தம் கொடுப்பதாக ஓமானில் பாதுகாப்பு இல்லத்தில் தங்கியுள்ள பெண் ஒருவரால் இலங்கை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படும் 05 பக்கங்களை கொண்ட கடிதமொன்று நியூஸ்பெஸ்ட்டுக்கும் கிடைத்தது.

ஓமானிலுள்ள இலங்கை தூதரகத்தின் முன்னாள் மூன்றாம் நிலை செயலாளர், இலங்கை பெண்களை தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்