தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் தலைவர் முத்து சிவலிங்கத்தின் இறுதி கிரியைகள் இன்று(24)

தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் தலைவர் முத்து சிவலிங்கத்தின் இறுதி கிரியைகள் இன்று(24)

தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் தலைவர் முத்து சிவலிங்கத்தின் இறுதி கிரியைகள் இன்று(24)

எழுத்தாளர் Staff Writer

24 Nov, 2022 | 12:49 pm

Colombo (News 1st) இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மறைந்த முன்னாள் தலைவர் முத்து சிவலிங்கத்தின் இறுதிக் கிரியைகள் இன்று(24) மாலை 03 மணிக்கு இடம்பெறவுள்ளன. 

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மறைந்த முன்னாள் தலைவர் முத்து சிவலிங்கத்தின் பூதவுடல் நுவரெலியாவிலுள்ள அன்னாரின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

அன்னாருக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக அரசியல் பிரமுகர்கள், கட்சி ஆதரவாளர்கள், பொது மக்கள் என பலரும் வருகை தந்திருந்தனர்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் தலைவரும் முன்னாள் அமைச்சருமான முத்து சிவலிங்கம் தமது 79ஆவது வயதில் நுவரெலியாவில் நேற்று(23) காலை காலமானார். 

1943ஆம் ஆண்டு பிறந்த முத்து சிவலிங்கம், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மூத்த உறுப்பினராவார்.

1994 ஆம் ஆண்டு பாராளுமன்றத்திற்கு தெரிவான முத்து சிவலிங்கம், விவசாய மற்றும் கால்நடைகள் பிரதி அமைச்சராகவும் தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சராகவும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகவும் பல பிரதி அமைச்சு பதவிகளையும் வகித்திருந்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்